அதிகரிக்கும் கொரோனா ! “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்”- மு.க.ஸ்டாலின்
கொரொனோ 2வது அலை ஏற்பட்டிருக்கும் தற்போதைய சூழலில் “மக்கள் நலனைக் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்” என்று தமது கட்சி உடன்பிறப்புகளுக்கு தி.மு.க.தலைவர்.ஸ்டாலின் வலியுறுத்துகிறார்.
திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரொனோ பரவல் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்,”தேர்தல் நேரம் மட்டுமல்லாமல் அனைத்து நேரத்திலும் மக்களுடன் இணைந்துள்ள இயக்கம்தான் திராவிட முன்னேற்ற கழகம்.கடந்த ஆண்டு இதே கொரொனோ பேரிடர் காலத்தில் மக்களுக்கு உதவிட ‘ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டத்தின் மூலம் மக்களுக்கு உணவு,மருத்துவ வசதி போன்ற அத்தியாவசிய பொருட்களைக் கழக தொண்டர்கள் கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினருக்கும் கொடுத்து உதவினார்கள்” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார் .
அதேபோல தற்போது உள்ள சூழலிலும் மக்களின் தாகம் தணிக்க ஆங்காங்கே தண்ணீர் பந்தல் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தனது அறிக்கையின் மூலமாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.மேலும் கபசுர குடிநீர்,முகக் கவசம்,சானிடைசர்,மற்றும் நீர்மோர் போன்றவற்றை தேவைப்படும் இடங்களில் மக்களுக்கு வழங்குமாறு தனது கட்சி நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு வரும் என்றும் அதுவரை காத்திருக்காமல் இப்பொது இருந்தே மக்களுக்கு உதவ வேண்டும் என்று ‘மக்கள் நலன் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள் உடன்பிறப்புகளே’ என்று கூறி அழைப்பு விடுத்துள்ளார்.