இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இதயங்களை இணைப்போம் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், திமுக தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரம் காட்டி வருகிறது.
திமுக நடத்தும் இதயங்களை இணைப்போம் மாநாட்டுக்கு AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.பின் இதற்கு திமுக தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திமுக சிறுபான்மை நல உரிமைப் பிரிவுச்செயலாளர் மஸ்தான் வெளியிட்ட அறிக்கையில்,திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை நல உரிமைப் பிரிவின் சார்பில் எங்கள் கழகத் தலைவரை வைத்து பொதுக்கூட்டம் நடத்துவது வழக்கமான ஒன்று. அந்த அடிப்படையில் இந்த ஆண்டு அப்படியொரு கூட்டம், இன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் கழகத் தலைவர் அவர்களது தலைமையில் நடைபெற உள்ளது.இந்தப் பொதுக்கூட்டத்திற்கு எப்போதும் போல் தி.மு.க.வின் தோழமை கட்சித் தலைவர்கள் மட்டுமே சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.மற்றபடி தொலைக்காட்சிகளில் வருவது போன்ற செய்தி உண்மையில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…