ஜனநாயக பண்பைக் காப்பாற்ற ஒன்றாக பயணிப்போம்… ராகுலுக்கு முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து.!

RahulGandhi Bday

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைவரும் முன்னாள் எம்.பி யுமான ராகுல் காந்திக்கு இன்று பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். மிகவும் தைரியமான மற்றும் அச்சமற்ற தலைவர், இளம் இந்தியாவின் உத்வேகம் என்று இந்திய இளைஞர் காங்கிரஸின் தேசியத் தலைவர் பிவி ஸ்ரீனிவாஸ் வாழ்த்து ட்வீட் செய்துள்ளார்.

மேலும் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், தனது டிவீட்டில் அன்பு சகோதரர் திரு. ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், இந்தியாவின் ஜனநாயக பண்பைக் காப்பாற்ற நமக்கு நீண்ட பயணம் உள்ளது. ஒன்றாக அணிவகுப்போம் என்று தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்