ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களையே மறந்துவிட்டனர் என நீதிபதி வேதனை.
பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகள் குழந்தைகளிடையே கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கில், தடை விதிக்கப்பட்ட பின்னரும் பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற விளையாட்டுகளை விளையாடும் பிரச்சனைக்கு முடிவு கட்டியே தீருவோம். இந்த விவாகரத்திற்கு முடிவு கட்டாமல் நீதிமன்றம் விடப்போவதில்லை என்று தெரிவித்த மதுரை கிளை நீதிபதிகள், விபிஎன் செயலியை முறைப்படுத்துவது தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்த வழக்கில் யூடியூப், கூகுள் நிறுவனங்கள் பதிலளிக்க வேண்டும் என நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
தடையை மீறி பயன்படுத்தும் VPN தொழில்நுட்பத்தை முறைப்படுத்த கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை உறுதியளித்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள் விளையாட்டு மைதானங்களையே மறந்துவிட்டனர். இந்த விளையாட்டுகளை தடை செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்த விவரங்களை மத்திய,மாநில அரசுகள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் அடிமையாவதை தடுக்கும் நடவடிக்கைகளே அவர்கள் மீது அரசு கொண்டுள்ள அக்கறையின் செயல்பாடு என்றும் இளைய சமுதாயத்தின் மீதான அக்கறை மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்தின் மீதான அக்கறை எனவும் கூறியுள்ளனர்.
சென்னை: விக்கிரவாண்டியில் தனியார் பள்ளியில் செப்டிக் டேங்கில் விழுந்து, லியா லட்சுமி என்ற 5 வயது குழந்தை உயிரிழந்தது. செப்டிக் டேங்கின்…
சென்னை: பொங்கல் திருநாளையொட்டி சொந்த ஊருக்கு செல்லும் மக்களுக்காக திருச்சி -தாம்பரம் - திருச்சி இடையே ஜன் சதாப்தி சிறப்பு…
புதுச்சேரி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பொங்கல் தொகுப்பிற்கு பதிலாக, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ. 750 வங்கி கணக்கில்…
கோவா: நடிகை சாக்ஷி அகர்வால் தனது சிறுவயது நண்பரான நவனீத் மிஸ்ராவை காதலித்து திருமணம் செய்திருக்கிறார். அவர்களின் திருமணம் நேற்று…
தெலுங்கானா: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் கடந்த டிச,4-ம் தேதி அன்று ‘புஷ்பா 2’ படத்தின் சிறப்பு காட்சி திரையிடலை…
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு ஆண்டு நிறைவையெட்டி தமிழக முழுவதும் மக்கள் நலப்பணிகளை தீவிரப்படுத்தி தவெக…