லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பட்டியலை வெளியிடுவோம் – அண்ணாமலை
தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க 15 நாட்கள் கால அவகாசம் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கெடு.
தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் பட்டியலை வேலாயிடுவோம் என தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். கோவை மாவட்டத்தில் 25 -ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க 15 நாட்கள் கால அவகாசம் தருகிறோம். முதலமைச்சர் காலம் தாழ்த்தாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும், தவறினால் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், நடவடிக்கை எடுக்காவிடில் அதிகாரிகளின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டர் அடிப்போம் என்றும் தெரிவித்த அண்ணாமலை, ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு மட்டன், புடவை உள்ளிட பொருட்களை திமுக கொடுக்கிறது எனவும் குற்றச்சாட்டினார். இதனிடையே, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற திமுக பணத்தை வாரி இறைப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு புகார் கடிதம் அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.