எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் ஈபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழி ஏற்பு.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆறாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில், கருப்பு நிற உடை அணிந்து வந்து ஈபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். கட்சியினர் மட்டுமன்றி பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் ஈபிஎஸ் தலைமையில், அதிமுகவினர் உறுதி மொழி ஏற்றனர். அதிமுக என்பது ஆயிரம் காலத்து பயிர், அதிமுக என்று ஆலமரத்தை அசைத்துப் பார்க்க முடியுமா? உடைத்து பார்க்க முடியுமா? நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சூழ் உரைப்போம்.
களங்கள் அனைத்திலும் வென்று கட்சியின் இமயமாய் உயர்த்திடுவோம். எதிரிகள் ஒருபக்கம் என்றால், துரோகிகள் மறுபக்கம். சதி வலைகளை அறுத்தெறிவோம் எதிரிகளை விரட்டியடிப்போம், தூரோகிகளை தூள் தூளாக்குவோம். குடும்ப ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப உறுதியேற்போம் என உறுதிமொழி எடுத்த பின், நினைவிடத்தில் பழனிசாமி மற்றும் அதிமுகவினர் மௌன அஞ்சலி செலுத்தினார்.
சென்னை : தனுஷ் இயக்கி இருக்கும் "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் " திரைப்படம் வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி…
டெல்லி : 2025- 26 ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்கிற தகவல் தற்போது…
மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் வளர்ந்து வரும் இளம் வீரரான (27) ரிங்கு சிங் விரைவில் திருமணம் செய்துகொண்டு…
சென்னை : நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி வரும் 2026 சட்டமன்ற தேர்தலில்…
சென்னை : இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலியை அடுத்த திருமால்பூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்…
மும்பை : ஆஸ்ரேலியாவுக்கு எதிராக நடந்து முடிந்த பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதில்…