இந்த உதவி எண்களை அனைத்து குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துவோம் – அமைச்சர் அன்பில் மகேஷ்
எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம் என அமைச்சர் அன்பில் மகேஷ் ட்வீட்.
இன்று சர்வதேச குழந்தைகளுக்கு எதிரான வன்முறை தடுப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘குழந்தைகளை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்துவது தண்டனைக்குரிய குற்றம்! குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்து அவர்களின் கல்விக்கு உதவ வேண்டியது நமது கடமை!
எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம்! 14417, 1098 ஆகிய உதவி எண்களை அனைத்து குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துவோம். அதற்கான விழிப்புணர்வை மேற்கொள்வோம்!’ என பதிவிட்டுள்ளார்.
எந்தக் குழந்தையும் உடல்ரீதியாகவோ மனரீதியாகவோ துன்புறுத்தப்படாமல் பாதுகாப்போம்!
14417, 1098 ஆகிய உதவி எண்களை அனைத்து குழந்தைகளுக்கும் தெரியப்படுத்துவோம். அதற்கான விழிப்புணர்வை மேற்கொள்வோம்!#World_Day_for_PreventionofChildAbuse
2/2
— Anbil Mahesh (@Anbil_Mahesh) November 19, 2022