தேர்தலுக்கு முன் பாக்கி இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.. அமைச்சர் துரைமுருகன் பேச்சு!
இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என பிரதமர் மோடி கூறினார் என அமைச்சர் துரைமுருகன் பேச்சு.
வேலூரில் ரூ.19.46 கோடி மதிப்பில் பொன்னை அணைக்கட்டு புனரமைப்பு பணிகள் மற்றும் மேல்பாடி கிராமம் அருகே பொன்னையாற்றின் குறுக்கே ரூ.12.94 கோடி மதிப்பில் தரைப்பாலம் அமைக்கும் பணிகளை திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தொடங்கி வைத்து வருகிறார்.
இதன்பின் பேசிய அவர், ஒரே தொகுதியில் 13 முறை தேர்தலில் நின்றுள்ளேன் எனக் கூறியதற்கு, இந்தியாவிலேயே இந்த மாதிரி யாரும் இல்லை என கூறினார் பிரதமர் மோடி. சட்டப்பேரவையில் எவ்ளோ நாளாக இருக்கீங்க என பிரதமர் மோடி கேட்டார், 54 ஆண்டுகள் என்றதும் “What 54 Years” என ஆச்சரியப்பட்டார் என கூறினார்.
இதனைதொடர்ந்து பேசிய அமைச்சர், தேர்தல் வரும்போது பாக்கி இல்லாமல் பார்த்துக்கொள்வோம் என்றும் மகளிருக்கான மாதந்தோரும் வழங்கும் உரிமைத்தொகை ரூ.1000 தேர்தலுக்கு முன்பே வழங்கப்பட்டு விடும் என்றார்.