தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை.
சமூக நீதி, பெண் விடுதலை, திராவிடர் விடுதலை என சமூகத்திற்காக அரும்பாடுபட்ட தந்தை பெரியாரின் 47-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. பெரியார் தனது 94 வது வயதில் வேலூரில் காலமானார். சுயமரியாதை இயக்கம், மூட நம்பிக்கை குறித்த தனது கருத்துக்களை மக்களிடமும் ஆணித்தரமாக புகட்டி வந்தார் பெரியார்.
இந்நிலையில், தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை அண்ணாசாலையில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.இதுகுறித்து அவரது ட்விட்டர் பதிவில், சுருண்டு கிடந்த தமிழினத்துக்கு சுயமரியாதைச் சூட்டைக் கிளப்பிய பகுத்தறிவுச் சூரியன் தந்தை பெரியாரின் 47வது நினைவு நாள்.
சமூக அடிமைத்தனம், ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் வரை, பெண்ணடிமைத்தனம் மறையாதவரை பெரியார் நித்தமும் நினைவு கூரப்படுவார். மேலும், பெரியார் ஏற்றிய சுடரை அணையாமல் காப்போம் என பதிவிட்டுள்ளார். இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஏஆரின் 33-ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…