இந்தியா முழுவதற்குமான விடியலைத் தருவோம்.! மதவாத இருட்டை விரட்டியடிப்போம்! – முதல்வர் மு.க.ஸ்டாலின்

CM Stalin

திமுக தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் நிறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் பதிவிட்ட ட்வீட்டில், “தன்னிகரற்ற தலைவர் கலைஞர் தன் தோளிலும் நெஞ்சிலும் அரைநூற்றாண்டு காலம் சுமந்த திராவிட முன்னேற்றக் கழகத்தை நான் சுமக்கத் தொடங்கி இன்றுடன் ஐந்தாண்டுகள் நிறைவடைகின்றன.”

“இந்த ஐந்தாண்டு காலத்தில் கண்ட களங்கள் அனைத்திலும் வெற்றி! காரணம், உடன்பிறப்புகளாகிய உங்களின் உழைப்புதான். உங்களின் ஆதரவு இருக்கும்வரை எந்தக் களத்திலும் உங்களில் ஒருவனான என்னால் வென்று காட்ட முடியும்.”

“நமது மாநிலத்திற்கு மட்டுமல்ல, INDIA முழுவதற்குமான விடியலைத் தருவோம்! மதவாத இருட்டை விரட்டியடிப்போம்! காண்கின்ற களம் அனைத்திலும் வெற்றியைக் குவிப்போம்!” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்