ஒருமித்த கருத்துள்ள கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம் – பாமக தலைவர் பேட்டி

Default Image

தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என மதுரையில் பாமக தலைவர் பேட்டி.

மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஒருமித்த கருத்துள்ள கட்சியுடன் இணைந்து கூட்டணி அமைப்போம். தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி மக்களுக்கானதா? தனியார் நிறுவனங்களுக்கானதா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதன்பின் பேசிய அவர், அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு மசோதா கண்டிக்கத்தக்கது.

மேலும், தனியார் நிறுவனம் 100 ஏக்கருக்கு மேல் வைத்திருந்தால், அந்த பகுதிக்குள் இருக்கும் நீர் நிலைகளில் கட்டுமானம் மேற்கொள்ளலாம் என சட்டம் சொல்கிறது. ஆனால் ஏழை மக்கள் நீர்நிலைகளில் வீடு கட்டினால் ஆக்கிரமிப்பு என அரசு அகற்றுகிறது. ஏழைகளுக்கு ஒரு சட்டம், பணக்கார நிறுவனங்களுக்கு ஒரு சட்டமா? தமிழக அரசு தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்