சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம் – முக ஸ்டாலின் மடல்

Default Image

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? கரப்ஷன், கமிஷன், கலெக்ஷன் மட்டுமே அடிமை அ.தி.மு.க. அரசின் ஒரே கொள்கை – முக ஸ்டாலின் மடல் 

சொன்னதைச் செய்வோம் செய்வதைச் சொல்வோம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கடிதத்தை வெளியிட்டுள்ளார். அதில், குடியரசு என்பது மக்களால், மக்களுக்காக, மக்களுடைய அரசு என்பது போல, திமுகவும் மக்களுடைய மாபெரும் இயக்கமாக தங்கு தடையின்றி, வெற்றிகரமாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.  பத்மஸ்ரீ விருதாளர்களில் ஒருவராக 103 வயதிலும் வேளாண் பணிகளில் ஈடுபடும் ஈரோட்டைச் சேர்ந்த பாப்பம்மாள் அம்மையாருக்கு கிடைத்திருப்பது, தமிழர்களாகிய அனைவருக்கும் மகிழ்ச்சியும் பெருமிதமும் தரும் செய்தி.

ஆட்சி மாற்றத்திற்கு தமிழக மக்கள் ஆயத்தமாகிவிட்ட நிலையில், அவர்களின் ஒரே நம்பிக்கைக்குரியதாக இருப்பது, தி.மு.கழகத்தின் தலைமையிலான சிறப்பான கூட்டணிதான். காரணம், ஆட்சியில் இல்லாதபோதும் மக்களுக்கு எப்போதும் துணையாக இருக்கின்ற இயக்கம் இது. ஜம்மு- காஷ்மீர் மாநில மக்களின் சிறப்புரிமைகள் பறிக்கப்பட்ட நேரத்தில், அழுத்தமாக ஒலித்த குரல், திராவிட முன்னேற்றக் கழகத்தின் குரல். கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய போராட்டத்துக்கு ஆதரவு வழங்கிய இயக்கம் திமுக.

தமிழகத்திலும் நடைபெற்ற விவசாயிகளின் பேரணிகளை முடக்கும் வகையில் அதிமுக அரசின் காவல்துறை கண்மூடித்தனமாகச் செயல்பட்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது ஒன்றே நிரந்தரத் தீர்வாக அமையும். பேரிடர் நேரத்திலும் மக்களுக்குத் துணை நிற்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் “ஒன்றிணைவோம் வா” என கொரோனா பேரிடர் காலத்தில் துணை நின்றது திமுக. ‘மக்கள் கிராம சபைக் கூட்டங்களை’ நடத்தி, அவர்களின் குறைகளைச் செவிமடுத்த இயக்கம் இது.

கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? கரப்ஷன் – கமிஷன் – கலெக்ஷன் என்பது மட்டுமே அடிமை அ.தி.மு.க. அரசின் ஒரே கொள்கை என்பது நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. உண்மை வெள்ளமாகப் பெருகும்போது, ஊழல் சாம்ராஜ்ஜியங்கள் சரிந்துதான் விழும். சட்டைப்பாக்கெட்டில் வைத்திருக்கும் படத்தைப் பார்த்தால் ஊழலுக்காக பதவி பறிக்கப்பட்டது தி.மு.க.வா? அ.தி.மு.க.வா? என்ற உண்மை தெரியும். அதனால், முதல்வர் பழனிசாமி சற்று குனிந்து பார்க்கட்டும். குனிவதுதான் அவருக்கு ரொம்பவும் இயல்பாயிற்றே.

திமுக ஆட்சிக்கு வந்த 100 நாளில் மக்களின் குறைகளைத் தீர்த்திட வேண்டும் என்றால், ஆட்சிக்கு வருவதற்கு முந்தைய 100 நாட்களும் அதற்கு மேலும் அயராது உழைத்திட வேண்டும். கழக அரசு நிறைவேற்றவுள்ள நூறு நாள் வேலைத் திட்டத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை, தேர்தல் களத்தில் நூற்றுக்கு நூறு சதவீத அளவிலான வெற்றியாக அமையும். “மிஷன் 200” என்கிற இலக்கையும் தாண்டும். வெற்றி விளைந்திருக்கிறது. அறுவடை நாள் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றுவோம் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

US Election 2024 live
PM Modi - Trump
Royal Enfield Interceptor Bear 650
sathya (2) (1)
Donald Trump
Tamilnadu CM MK Stalin
US Election 2024 trump win