“பெரியாரை ஏற்றுக்கொள்வோம் ஆனால்.,” கொள்கை தலைவர்களில் விஜய் வைத்த டிவிட்ஸ்ட்.!

தவெகவின் கொள்கை தலைவர்கள் குறித்து அக்கட்சி தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

VIJAI - THALAIVARKAL

விழுப்புரம் : த.வெ.க கட்சியானது 5 கொள்கை தலைவர்களாக பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கட்சித் தலைவர் விஜய் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில், “போராட்ட களத்தில் இறங்கி போராடிய ராணி வேலுநாச்சியார், பகுத்தறிவு தந்தை பெரியார, பச்சை தமிழன் காமராஜர், சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர், கர்ப்பவதியாக இருந்தும் போராடிய பெண் தெய்வம் அஞ்சலை அம்மாள் என்று கொள்கை தலைவர்களின் வழியில் அரசியல் அமைக்க உள்ளதாக கூறிவுள்ளார்

பெரியார் எங்கள் கொள்கைத் தலைவர்னு சொன்னதும் PAINT டப்பாவ தூக்கிட்டு ஒரு கூட்டம் கிளம்பும். ஆனால், பெரியாரை முன்னிறுத்தி தமிழக வெற்றி கழகம் தனது அரசியல் செயல்பாடுகளை முன்னெடுக்க உள்ளதை தெளிவுபடுத்தி உள்ளது.

தவெகவின் கொள்கை தலைவர்கள் குறித்து அக்கட்சி தலைவர் விஜய் விளக்கம் அளித்துள்ளார்.

தந்தை பெரியார்

“இந்த மண்ணுக்காக வாழ்ந்து, இந்த மண்ணின் அடையாளமாகிப் போனவர்கள் தான் எங்கள் கொள்கைத் தலைவர்கள். பகுத்தறிவுப் புரட்சியாளர் தந்தை பெரியார் சொன்ன கடவுள் மறுப்பு கொள்கையை மட்டும் நாங்கள் கையில் எடுக்கப் போறது இல்ல. எங்களுக்கு அதில் உடன்பாடும் இல்லை. யாரோட கடவுள் நம்பிக்கைகைக்கும் நாங்கள் எதிரானவங்க இல்லை.

அரசியலில் அண்ணன் தம்பி உறவை அறிமுகப்படுத்திய அறிஞர் அண்ணா சொன்ன மாதிரி ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது தான் எங்கள் நிலைப்பாடு. பெண்கல்வி, பெண்கள் முன்னேற்றம், சமூக சீர்த்திருத்தம், சமுகநீதி பகுத்தறிவு சிந்தனை என பெரியார் சொன்ன இவற்றையெல்லாம் நாம் முன்னெடுக்க போகிறோம்.

வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள், காமராஜர், அம்பேத்கர் ஆகிய நால்வரும் தேசிய தலைவர்கள், தேசிய சிந்தனை கொண்டவர்கள்” என்று கூறினார்.

வீரமங்கை வேலு நாச்சியார்

பெண்களை கொள்கைத் தலைவர்களாக ஏற்று களத்திற்கு வரும் முதல் அரசியல் கட்சி தவெக தான். ஆகப்பெரும் வீராங்கனை, மற்றொன்று இந்த மண்ணை கட்டி ஆண்ட பேரரசி. சொந்த வாழ்க்கையின் சோகத்தை மறந்து இந்த மண்ணுக்காக வாலேந்தியும், வேலேந்தியும் போர்க்களம் புகுந்து ஆணைக் காட்டிலும் வீரமான வேகமான புரட்சியாளர் வேலு நாச்சியார்.

தியாகி அஞ்சலை அம்மாள்

முன்னேறத் துடிக்கிற சமூகத்தில் பிறந்து இந்த மண் பின்தங்கிட கூடாது என்பதற்காக இந்த மண்ணின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் தியாகி அஞ்சலை அம்மாள். சொத்தை இழந்தாலும் சுயநலம் பார்க்காமல் இந்த மண்ணுக்காக இந்திய சுதந்திர போராட்ட களத்தில் இறங்கி களமாடிய புரட்சி பெண்மணி அஞ்சலை அம்மாள். இவர்களை பின்பற்றுவதே நமது மதச்சார்பின்மைக்கும், சமுதாய நல்லிணக்கத்திற்குமான மிகப்பெரிய சான்றாக இருக்கும் என்றார்.

பச்சைத் தமிழர் பெருந்தலைவர் காமராஜர்

இந்த மண்ணில் மதச்சார்பின்மைக்கும், நேர்மையான நிர்வாக செயல்பாட்டுக்கும் முன்னுதாரணமாக இருக்கும் பெருந்தலைவர் காமராஜரை எங்கள் வழிகாட்டியாக ஏற்கிறோம் என கூறினார்.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர்

இந்திய துணைக் கண்டத்தின் அரசியல் சாசனத்தை ஆக்கி காட்டியவர் அண்ணல் அம்பேத்கர், இந்தியாவில் இந்தப் பெயரை கேட்டாலே சமூகத்தில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துபவர்கள் நடுங்கி போய்விடுவார்கள். வகுப்புவாரி பிரிதிநிதித்துவத்தையும், சாதி ஒடுக்குமுறையையும் நிலைநிறுத்த போராடிய மாபெரும் தலைவர் அம்பேத்கரையும் எங்கள் வழிகாட்டி என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம் என் பேசிருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
bcci
mysskin - Aruldoss
seeman ponmudi
RN Ravi - Congress
ADMK - EPS
magizh thirumeni