“முருகப் பெருமானைப் போற்றுவோம்!” விஜயின் தைப்பூச திருவிழா வாழ்த்து!

அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள் என தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் த.வெ.க தலைவர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

tvk vijay thaipusam

சென்னை :  இன்று இந்து கடவுள் முருகனுக்கு உகந்த பண்டிகைகளில் ஒன்றான தைப்பூச திருவிழா முருகனின் அறுபடை வீடுகள் மட்டுமன்றி அனைத்து பகுதி முருகன் கோயில்களிலும் கோலாகலமாக கொண்டாடபட்டு வருகிறது. குறிப்பாக, பழனி கோயிலில் நடைபெறும் தேரோட்டம், திருக்கல்யாணம், கந்த சஷ்டி மண்டப பூஜைகள் போன்றவை பெரும் முக்கியத்துவம் பெற்றவை.

அதே நேரத்தில், திருச்செந்தூரில் கடல் தீர்த்தம், திருப்பரங்குன்றத்தில் சிறப்பு அபிஷேகம் போன்ற நிகழ்வுகளும் பக்தர்களை பெரிதும் ஈர்க்கின்றன.இன்று தைப்பூச திருவிழாவை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

ஏற்கனவே, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அவரைத்தொடர்ந்து, த.வெ.க தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதில் ” தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

கிருஸ்துமஸ், பொங்கல் ஆகிய பண்டிகைகளுக்கு ஏற்கனவே விஜய் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கவில்லை. எனவே, இது தொடர்பாக விமர்சனங்களும் அந்த சமயம் எழுந்தது. இந்த சூழலில், இன்று தைப்பூச திருவிழா முன்னிட்டு த.வெ.க தலைவர் விஜய் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 11 02 2025
donald trump angry
NarendraModi -Thaipoosam
India vs England 3rd ODI
champions trophy 2025 india squad
aadhav arjuna - prashant kishor
kanja karuppu