சென்னை வில்லிவாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அவர், பின்னர் செய்தியாளர்களுடன் பேசினார். அப்போது,காவிரி நதிநீர் பங்கீடு குறித்த வழக்கின் இறுதித் தீர்ப்பு குறித்து கேட்டதில் ஸ்கீம் என்ற வார்த்தைக்கான அர்த்தத்தை மத்திய அரசு டிக்ஸ்னரியை பார்த்து தெரிந்து கொள்ளட்டும் என்று ஜெயக்குமார் கூறினார்.
சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதியளித்திருப்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு முறையாக பரிசீலித்து முடிவெடுக்கும் என்று ஜெயக்குமார் கூறினார்.