சமசீரான தொழில் வளர்ச்சிக்கு அனைத்து பிரிவினருக்கும் சிறந்த முறையில் வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை தனியார் விடுதியில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ‘தோள் கொடுப்போம் தொழில்களுக்கு’ தெற்கு மண்டல மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி, அன்பில் மகேஸ் உள்ளிட்டோர்கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் வளர்த்த மதுரை இன்று தொழில் வளர்ச்சியிலும் முன்னணியில் உள்ளது; மதுரையில் இயங்கி வரும் 50,000 சிறு குறு நிறுவனங்கள் மூலம் 3 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது.
மதுரையில் டைடல் நிறுவனம் மற்றும் மாநகராட்சி இணைந்து ‘டைடல் பார்க்’ அமைக்கிறது. மாட்டுத்தாவணி பகுதியில் 2 கட்டமாக தொடங்கப்படும் திட்டத்திற்கு, முதல் கட்டமாக ₹600 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் எளிமையாக தொழில் தொடங்குவதற்கான பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்து முதல் இடத்திற்கு வர வேண்டும் என்றும், சமசீரான தொழில் வளர்ச்சிக்கு அனைத்து பிரிவினருக்கும் சிறந்த முறையில் வங்கிகளில் கடனுதவி வழங்க வேண்டும் என்றும் வங்கிகளுக்கு முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
டெல்லி : உடல் நலக்குறைவால் நடிகர் டெல்லி கணேஷ் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருக்கும் போதே உயிரிழந்தார். அவரது மறைவு…
பலுசிஸ்தான் : நேற்று காலை 9 மணி அளவில் பலுசிஸ்தானில் அமைந்துள்ள குவெட்டா ரயில் நிலையத்தில் பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம்…
சென்னை : புஷ்பா படத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்று இருந்த "ஓ சொல்றியா மாமா" பாடல் மிகப்பெரிய ஹிட்டாகி படத்தின்…
மும்பை : பொதுவாகவே, சினிமா துறையிலும் சரி, விளையாட்டுத் துறைகளிலும் சரி சில பிரபலங்கள் தங்களுடைய குழந்தைகளின் முகத்தை ஊடகத்திற்கு…
சென்னை : வரும் 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையிலும், அந்த தேர்தலில் தேமுதிக கட்சியின் கட்டமைப்பைப் மேம்பபடுத்துவது தொடர்பாக…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…