தாயின் வாக்கினை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம் – ஓபிஎஸ்
எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும் என ஓபிஎஸ் ட்வீட்.
இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து, அவரது நினைவிடத்தில் ஈபிஎஸ் மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனை தொடர்ந்து, ஓபிஎஸ், சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அஞ்சலி செலுத்தவுள்ளனர். இந்த நிலையில், ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கழகத்திற்காகவும் மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளான இன்று, “எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்!” என்ற தாயின் வாக்கினை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம் என உறுதியேற்போம்.’ என பதிவிட்டுள்ளார்.
கழகத்திற்காகவும் மக்களுக்காகவும் தன்னையே அர்ப்பணித்த இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவு நாளான இன்று, “எனக்கு பின்னாலும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அஇஅதிமுக மக்களுக்காகவே இயங்கும்!” என்ற தாயின் வாக்கினை நிறைவேற்ற அனைவரும் ஒற்றுமையோடு உழைப்போம் என உறுதியேற்போம். pic.twitter.com/Uou62Pnw2d
— O Panneerselvam (@OfficeOfOPS) December 5, 2022