நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் என கமலஹாசன் கடிதம்.
தமிழகத்தில் தொடர்ந்து மாணவர்களின் மரணம் தொடர்ந்து வருவதாகவும் இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் கமலஹாசன் அவர்கள் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
அதில், பொது தேர்வில் தோல்வி, நீட் தேர்வு பயம், பெற்றோர் கண்டிப்பு, ஆசிரியர் அவமதிப்பு, காதல் விவகாரம், வறுமை என தற்கொலைக்கான காரணிகள் வேறுபட்டாலும் சவால்களை துணிவுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் மனவலிமையை நம் பிள்ளைகள் மெல்ல இழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களது கருத்துக்கள் அபிப்பிராயங்கள் விருப்பங்களுக்கு செவி கொடுங்கள். ஒருவரை ஒருவர் பரஸ்பரம் அவமானப்படுத்திக் கொள்ளாது ஆரோக்கியமான உரையாடலை மேற்கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஊடகங்களுக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். அதன்படி தற்கொலை செய்திகளை ஒளி பரப்பும் போது தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் தொடர்பு கொள்ள இலவச மனநல ஆலோசனை வழங்கும் தற்கொலை தடுப்பு மையத்தின் எண்களோடு சேர்த்து அளிப்பதை ஒரு சமூக கடமையாக கைக்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழக அரசு தற்கொலை தடுப்பு படை ஒன்றை அமைக்க வேண்டும். பள்ளிகளில் மருத்துவ பரிசோதனை முகாம்கள், கண் பரிசோதனை முகாம்கள் நடப்பதை போல பதின்ம வயது மாணவர்களிடம் உரையாடி அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் மனக்குழப்பங்கள் இருக்கிறதா என்பதை கண்டறிந்து உதவ வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், நாளைவரும் நாளிதழ்களிலாவது மாணவர்களின் மரணச்செய்தி இல்லாதிருக்கட்டும் என்ற அறிவுறுத்தலோடு தனது கடிதத்தை நிறைவு செய்துள்ளார்.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…