தமிழக அரசே! “தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு” – பா.ரஞ்சித் காட்டம்!

சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் தமிழக அரசு தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை என இயக்குநர் பா.ரஞ்சித் எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

pa ranjith

சென்னை : ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றி வரும் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தை நடத்தி வருவது தமிழகத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில், போராட்டத்தில் இருந்த சிஐடியு தொழிற்சங்கத்தை சேர்ந்த சாம்சங் ஊழியர்களை காவல்துறையினர் கைது செய்தது பல தரப்பில் இருந்து கண்டனங்களை எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.

Read More- மீண்டும் போராட்டம்., சாம்சங் ஊழியர்கள் அதிரடி கைது.! 

ஊழியர்களை கைது செய்தது தொடர்பாக அரசியல் தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி போராட்டங்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துவைக்க திராணியின்றி, அடக்குமுறையால் ஒடுக்க முயலும் விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் என எக்ஸ் வலைதள பக்கத்தில் தெரிவித்து இருந்தார் . 

அவரை தொடர்ந்து அடுத்ததாக, இயக்குநர் பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “தமிழக அரசே! தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு” என காட்டத்துடன் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ”  தொழிற்சங்கம் என்பது ஒரு தொழிலாளியின் அடிப்படை உரிமையாகும்.

இப்படி தொழிற்சங்கம் வேண்டியும், சிறந்த பணிச்சூழலுக்காகவும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வரும் சாம்சங் தொழிலாளர்கள் தங்களது சட்டப்பூர்வ உரிமைகளுக்கு உட்பட்டு வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு இதை மதிக்காமல், தனியார் நிறுவனத்திற்கு சாதகமாக நடந்து கொள்வது மிக மோசமான அனுகுமுறை. தொழிலாளர்கள் அமைதியான முறையில் வேலைநிறுத்தம் செய்து வரும் போராட்டக்களத்தை அரசு அகற்றுவதில் எந்த நியாயமும் இல்லை.

தொழிலாளர்களை இவ்வாறு கைது செய்வது அரசியலமைப்பிற்கு முரணானது, மேலும் தொழிலாளர்களை அச்சுறுத்துவதற்கு காவல்துறையை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது கண்டிக்கப்பட வேண்டியதாகும்” என கூறியுள்ளார். அரசியல் தலைவர்கள் மட்டுமே இந்த விவகாரத்தில் தங்களுடைய கண்ணடங்களை தெரிவித்து வந்த நிலையில், சினிமா துறையில் இருந்து முதல் ஆளாக இறங்கி தனது கண்டனத்தை பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்