சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்!

Published by
லீனா

சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்.

கடலூர் அருகே சுருக்குமடி வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து மீனவ கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுருக்குமடி வலையை பயன்படுத்த கடந்த 2000-ம் ஆண்டே அரசு தடை விதித்திருந்த நிலையில், சில இடங்களில் இந்த வலை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், கடலூர் மாவட்டம், சாமியார்பேட்டையில், 32 கிராம மீனவர்கள் இணைந்து இந்த வலையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வலையை பயன்படுத்துவதால் கடல் வளம் பாதிக்கப்படுவதுடன், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான படகுகளில் கருப்பு கோடி கட்டி மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து, அந்த இடத்திற்கு 5,00 போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும், மக்களை சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், அறவழியில் போராட்டம் நடத்த வேண்டும் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

44 minutes ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

1 hour ago

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

2 hours ago

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

3 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

3 hours ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

4 hours ago