தீ பரவட்டும்…டெல்லி முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

Default Image

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவால்  மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் 

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக  சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் ” பாஜக ஆளாத மாநில அரசுகளின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் மத்திய அரசு மற்றும் அதன் பிரதிநிதிகளின் நடவடிக்கைகளை நாங்கள் கண்டிக்கிறோம்.

பாஜக அல்லாத ஆட்சியின் கவர்னர்கள் அல்லது லெப்டினன்ட் கவர்னர்கள் காலவரையின்றி சட்டப் பேரவைகளால் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அல்லது  அரசு அனுப்பிய கோப்புகளை வைத்திருப்பது நமது அரசியலமைப்புத் திட்டத்தை மீறுவது மட்டுமல்ல ஆனால் மக்கள் ஆணையை மதிக்காதது என்று கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆளுநருக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது போல், டெல்லியிலும் ஆளுநர்களின் செயல்பாடுகளுக்கு கால நிர்ணயம் செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வருவோம் என” கடிதம் எழுதி இருந்தார்.

நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின் 

அதற்கு நன்றி தெரிவித்துள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் ” தீர்மானத்தைப் பாராட்டி எங்கள் குழுவில் இணைந்ததற்காக மாண்புமிகு அரவிந்த் கேஜ்ரிவால் அவர்களுக்கு நன்றி. உண்மையில், எந்தவொரு ஜனநாயகத்திலும் சட்டமன்றத்தின் இறையாண்மையே உயர்ந்தது. மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவு தந்தமைக்கு நன்றி. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளின் பொறுப்பை நியமன ஆளுநர்கள் தட்டிக் கழிக்க கூடாது. தீ_பரவட்டும்!” என பதிவிட்டுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்