அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை ஒளிரச் செய்யட்டும் – ஆளுநர் ரவி தீபாவளி வாழ்த்து!
அறியாமை இருளை அகற்றி அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச் செய்யட்டும் என ஆளுநர் ரவி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நாளை நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தமிழக மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழ்நாடு மற்றும் நம் தாய் திருநாட்டின் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது இனிய மற்றும் பசுமை நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
தீபங்களின் திருநாளாம் தீபாவளி திருநாள். நன்மையின் குன்றா வலிமையையும், தீமைகள் அனைத்தையும் வென்றெடுக்கும் அதன் ஆற்றலையும் கொண்டாடும் பொன்னாள் ஆகும். வாய்மையும் மரபும் இறுதியில் வெல்லும் என்பதை இத்திருநாள் எடுத்தியம்புகிறது. இருளிலிருந்து ஒளியை நோக்கி செல்லவும், அறியாமை எனும் நிலையிலிருந்து விலகி மேலான அறிவை எய்தவும் மனச்சோர்வில் இருந்து விடுபட்டு பேரின்பத்தை பெறவும், இந்த நாள் நமக்கு ஊக்கம் அளிக்கிறது.
இதனால் நம் நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வையும், நல்லெண்ணத்தையும், தோழமை உணர்வையும் வலுப்பெற செய்வதுடன் சமுதாயத் தொண்டாற்றவும் நமக்கு ஊக்கம் அளிக்கிறது. அறியாமை எனும் இருளை அகற்றி, அறிவொளி எனும் தீபத்தை இத்திருநாள் ஒளிரச் செய்யட்டும். இந்த தீபாவளி நம் அனைவரின் வாழ்வில் அமைதியையும், ஒற்றுமையையும், மகிழ்ச்சியையும் அளிக்கும் என குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,