கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதை முதல்வர் புரிந்து கொள்ளட்டும் -கனிமொழி

Default Image

கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதையும் முதல்வர் புரிந்து கொள்ளட்டும் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர்-விழுப்புரம் சாலையில் உள்ள  எம்ஜிஆர்  சிலைக்கு  காவித்துண்டு அணிவித்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதுச்சேரி அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், வையாபூரி மணிகண்டன் உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் பேச்சுவார்த்தைக்கு பின் அங்கிருந்து சென்றனர். மேலும், இது தொடர்பாக அம்மாநில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பழனிசாமி கண்டனம் தெரிவித்தனர். புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலைக்கு காவித்துண்டு அணிவித்து களங்கப்படுத்தியது மனவேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் பழனிச்சாமி தெரிவித்தார்.மேலும்  சிலைக்கு அவமரியாதை ஏற்படுத்திய விஷமிகள் பிடித்து சட்டத்தின்முன் நிறுத்த வேண்டும் என்று புதுச்சேரி முதல்வருக்கு முதலமைச்சர் பழனிசாமி வலியுறுத்தினார்.

 இதன் பின் புதுச்சேரியில் எம்ஜிஆர் சிலை அவமதிக்கப்பட்டது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் காவித்துண்டு அணிவித்தவர்களை கண்டுபிடிக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி கூறினார்.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், புதுச்சேரியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு போட்ட சம்பவத்தை தமிழக முதல்வர் கடுமையாக கண்டித்துள்ளார். கண்டிக்கவேண்டிய செயல் என்பதில் மாற்றுக்கருத்தும் இல்லை. தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பெரியார் சிலைகள் அவமானப்படுத்தப்பட்டபோது, கடும் நடவடிக்கை எடுக்காமல் போனதன் விளைவே இது என்பதையும் முதல்வர் புரிந்து கொள்ளட்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
vaikunda ekathasi (1)
ponmudi dmk
mk stalin ABOUT tn
tvk vijay
deepika padukone l & k
Stalin's announcement Prison sentence