பாஜக என்ற நச்சுப்பாம்பை அதிமுக கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு வரட்டும் – பா.சிதம்பரம்
இரட்டை இலை இருக்கும் போது எடப்பாடி பழனிசாமி எதற்காக பயப்படுகிறார்? என ப.சிதம்பரம் கேள்வி.
சிவகங்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், தனியார் முதலீடு வந்தால் தான் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்.
மத்திய அரசு ஓராண்டில் ரூ.10 லட்சம் கோடி முதலீடு என்பது ஆகாயத்தில் கோட்டை கட்டுவது போன்றது. உணவு உரமானியம் குறைப்பு உணவு பொருட்களின் விலை அதிகரிப்புக்கு வழிவகுக்கும். என தெரிவித்துள்ளார்.
மேலும், அரசுகளை கலைக்காமல் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குகிறார்கள் பாஜகவினர். பாஜக என்ற நச்சுப்பாம்பை அதிமுக கழுத்தில் மாலையாக அணிந்துகொண்டு வரட்டும் வேண்டாம் என சொல்லவில்லை. இரட்டை இலை இருக்கும் போது எடப்பாடி பழனிசாமி எதற்காக பயப்படுகிறார்?
அதானியும், பிரதமர் மோடியும் நண்பர்கள் என்பதை மறுக்க முடியாது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்தி மாநில அரசின் ஆட்சிகள் கலைக்கப்பட்டது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அதை யாரும் இல்லை என்று சொல்லவில்லையே. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் சட்டப்பிரிவு 356-ஐ பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை பயன்படுத்தினார்கள். அதை தவறாக பயன்படுத்தியிருந்தால், அந்த அரசை மக்கள் அன்றைக்கே தண்டித்திருப்பார்கள்.