சமூகப் பொறுப்புணர்வு மிகுந்த முற்போக்கான படைப்புகள் திரையை ஆளட்டும் என ட்வீட் செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
68வது தேசிய விருது இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது. மிக முக்கிய விருதான சிறந்த நடிகர், நடிகை, திரைப்படம் ஆகியவற்றை தமிழ் சினிமா கைப்பற்றியுள்ளது. சூரரை போற்று திரைப்படம் 5 விருதுகளையும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 விருதுகளும், மண்டேலா திரைப்படத்திற்கு 2 விருதுகளும் சேர்ந்து தமிழ் சினிமா 10 விருதுகளை தட்டி தூக்கியுள்ளது.
இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பாராட்டியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 68ஆவது தேசிய விருது நிகழ்ச்சியில் தேசிய விருதுகளைக் குவித்துத் தமிழ்த்திரையுலகுக்குப் பெருமை சேர்த்துள்ள தம்பி சூர்யா, சுதா கொங்காரா, ஜிவி பிரகாஷ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட சூரரைப்போற்று படக்குழுவினருக்கும், லட்சுமி பிரியா சந்திரமௌலி, ஸ்ரீகர் பிரசாத், வசந்த் உள்ளிட்ட சிவரஞ்சினியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கும், மடோனா அஸ்வின், யோகி பாபு உள்ளிட்ட மண்டேலா படக்குழுவினருக்கும் எனது பாராட்டுக்கள். அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…