தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மூன்றாவது நாளாக இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.அதன்படி,கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ. அர்ச்சுணன் சட்டப்பேரவையில் பேசுகையில்:எடப்பாடி தொடங்கி ஓ.பி.எஸ், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டவர்களை பாராட்டி பேசிய போது குறுக்கிட்ட சபாநாயகர் அப்பாவு,”கேள்வி நேரத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள்”, என்றார்.
பாவம்,அவரை விட்டு விடுங்கள்:
உடனே,குறுக்கிட்டு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியதாவது:”எல்லாரும் சட்டப்பேரவையில் பேசும் போது தலைவர்,துணைத் தலைவர் பற்றி பேசினார்கள்.தற்போதுதான் எம்எல்ஏ ஒருவர் கட்சியின் அதிமுக கொறடாவான எஸ்.பி.வேலுமணி பற்றி பேசுகிறார்.பாவம்,அவரை விட்டு விடுங்கள்”,என்று கூறினார்.இதனைக் கேட்டு அவையில் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் குபீரென்று சிரித்தனர்.
5 கோப்புகளில் கையெழுத்து:
இதனிடையே,தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்ற எதிர்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அளித்த உரையில்,கொரோனா நிவாரண நிதி, பால் விலை குறைப்பு, அரசுப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறை, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்ற 5-ல் முதல் 4 வாக்குறுதிகள் திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருந்தது. பதவியேற்ற உடனேயே 5 கோப்புகளில் கையெழுத்திட்டு அரசாணை வெளியிட்டேன் என்று கூறினார்.
பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை:
மேலும்,பொள்ளாச்சி,வண்ணாரப்பேட்டை வழக்கு போல் இல்லமால் விருதுநகர் பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை பெற்று தந்து இந்தியாவுக்கு உதாரணமாக இருக்கும் என்று முதல்வர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்த நிலையில், …
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்து இருந்தார். அவர்…
ஹரியானா : மாநிலம் குருகிராமில் கடந்த ஏப்ரல் 5, 2025 அன்று, 46 வயது விமானப் பணிப்பெண்ணாகப் பயிற்சி பெற்ற ஒரு…
சண்டிகர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், பஞ்சாப் அணியும் மகாராஜா யாதவீந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…