தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் – அமைச்சர் ஜெயக்குமார் சவால்

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து போட்டியிடட்டும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இன்று நாடுமுழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இந்தியர்கள் அனைவரும் பெருமை பட கூடிய வகையில் சுதந்திரத்திற்காக போராட்டம் செய்தவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

இதையடுத்து, தமிழகம் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், காங்கிரஸ்க்கு இனிமேல் தமிழகத்தில் எந்த ஒரு அரசியல் எதிர்காலமும் இருக்காது. தமிழ்நாட்டில் திமுகவும் காங்கிரசும் நிராகரிக்கப்பட்ட கட்சிகள். உங்கள் தொகுதியில் உங்கள் ஸ்டாலின் பிரச்சாரம் குறித்த கேள்விக்கு, எல்லாம் பிரசாந்த் கிஷோரின் ஐடியா என்றும்  வெவ்வேறு விதமான பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் திமுகவும், காங்கிரசும் நிராகரிக்கப்பட்ட கட்சிகள்.

மேலும், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால் என்னை எதிர்த்து ராயபுரம் தொகுதியில் போட்டியிடட்டும். ஐந்து முறை ராயபுரத்தில் வெற்றி பெற்ற நிலையில், 6-வது முறையாக மக்கள் தன்னையே தேர்ந்தெடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையை தண்டிக்கும் வகையில் குழு இருக்க வேண்டும். தண்டிக்காவிட்டால் கண்துடைப்பு குழுவாக ஏற்றுக்கொள்ள முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்