கொங்கின் சங்கநாதம் கோட்டையில் முழங்கட்டும்., வெற்றி நமதே – வேட்புமனு தாக்கல் செய்த கமல்

Published by
பாலா கலியமூர்த்தி

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்து வருகிறது. கடந்த 12ம் தேதி அனைத்து தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் தொடங்கப்பட்டது. அந்த வகையில் இன்று மதியம் சேலம் மாவட்டம் எடப்பாடியில் 7வது முறையாக முதல்வர் பழனிசாமி வேட்புமனு தாக்கல் செய்தார். சென்னை கொளத்தூர் தொகுதியில் 3வது முறையாக போட்டியிட எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில், கோவை தெற்கில் காங்கிரஸ், பாஜகவை எதிர்த்து போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவையில் எனது பழைய நினைவுகள் அதிகம். நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள், எனக்கு மிகவும் பிடித்த ஊர் என கூறியுள்ளார்.

மத நல்லிணக்கம் இல்லாமல் ஆக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதை முழுமையாக முறியடிக்க வேண்டும். மீண்டும் கோவையை சீரமைத்து கொண்டு வர வேண்டும். இதனால் இங்கு போட்டியிட முடிவு செய்தேன் என்று தெரிவித்துள்ளார். மே 2ம் தேதிக்கு பின்னர் கமல்ஹாசன் புதிய படத்தில் நடிக்க செல்வார் என்று கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வேட்புமனு தாக்கல் செய்தபின் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திருவெற்றியூர் தொகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், பண்ருட்டி தொகுதியில் திமுக கூட்டணியில் போட்டியிடும் தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன், திருச்செங்கோடு தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சித் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், கோவில்பட்டி தொகுதியில் அமமுக சார்பில் டிடிவி தினகரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?

MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…

10 minutes ago
இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

8 hours ago
போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

9 hours ago

தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் தகவல்!

சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…

9 hours ago

பிளே ஆஃப் செல்லப்போவது யார்? மும்பை vs டெல்லி இடையே கடுமையான போட்டி!

மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…

9 hours ago

தேசத்தில் அழிக்கும் கட்சி ஒன்று இருக்கிறதென்றால் அது பாஜக! செல்வப்பெருந்தகை விமர்சனம்!

சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…

10 hours ago