டென்ஷனை விடுங்க; தேர்வில் வெற்றி பெற குடும்பத்தில் ஒருவராக முதல்வர் ஸ்டாலின் கூறிய வாழ்த்துக்கள்.!
12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்கவுள்ள நிலையில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் இன்று தொடங்குகிறது. 8.8 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த பொதுத் தேர்வினை எழுத உள்ளனர். இதற்காக 3,169 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மாணவர்களுக்கு தேர்வு குறித்து அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இது குறித்து முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது, என் பேரன்பிற்குரிய மாணவர்களே தேர்வு டென்ஷனை தவிருங்கள், பயமின்றி தேர்வினை எழுதுங்கள். இது மற்றுமொரு தேர்வுதான், தேர்வு பயத்தினை விடுத்து அச்சமின்றி உறுதியுடன் தேர்வு எழுதுங்கள். தேர்வு உங்களை அடுத்த நிலைக்கு, உயர்த்தி விடும் ஒரு வழி, உங்களை சோதிக்கும் முறை அல்ல, இதனால் நம்பிக்கையுடன் தேர்வு எழுதுங்கள்.
எந்தவித தயக்கமுமின்றி தேர்வினை எதிர்கொள்ளுங்கள், நிச்சயம் வெற்றி உங்களுக்கு தான். முதல்வராக மட்டுமல்லாமல் உங்கள் பெற்றோர்கள் போல, குடும்பத்தில் ஒருவராக உங்களது வெற்றிக்கு காத்திருக்கிறேன், என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
பொதுத்தேர்வை எதிர்கொள்ளவுள்ள என் பேரன்புக்குரிய மாணவர்களே! #AllTheBest pic.twitter.com/QE8FiAFieW
— M.K.Stalin (@mkstalin) March 12, 2023