Bharat Bandh வெல்லட்டும், மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் – முக ஸ்டாலின்
உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள் நொறுங்கட்டும் என்று முக ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லையில் விவசாய அமைப்பினர் 13வது நாளாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்த நிலையில், இன்று நாடு முழுவதும் வேளாண் சட்டங்களை எதிர்த்து பாரத் பந்த் என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
விவசாயிகளின் முழு அடைப்பு போராட்டத்திற்கு நாடு முழுவதும் பரவலாக ஆதரவும் கிடைத்துள்ளது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு, அவர்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் கடைகள், நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளது. சென்னையிலும் பெரும்பாலான வர்த்தக நிறுவனங்கள் முடப்பட்டுள்ளன.
இந்நிலையில், இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது. உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள். StandWithFarmers என்றும் BharatBandh வெல்லட்டும், மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
உழவே தலை என்கிறது வள்ளுவம். ஆனால் இங்கு தலையே நிலை குலைகிறது!
உயிர் கொடுக்கும் உழவரின் உயிரையே விலை பேசும் மூன்று வேளாண் சட்டங்கள்!
உழவு என்பது தொழில் மட்டுமல்ல. நம் அனைவரின் உரிமை!#StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்! https://t.co/0g02ymh6yr
— M.K.Stalin (@mkstalin) December 8, 2020