அண்ணாமலையிடம் ஆவணம் இருந்தால் பேசட்டும், வெற்று விளம்பரத்திற்காக பேச வேண்டாம் – அமைச்சர் செந்தில் பாலாஜி
அடுத்த 3 நாட்களுக்கு வரும் கன மழையை கையாள தயாராக உள்ளோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி.
அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஒரு அரசியல் கட்சி அமலாக்கத்துறையை எப்படி பயன்படுத்துகிறது என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுவதிலேயே தெரிகிறது. அவரிடம் ஆவணம் இருந்தால் பேச சொல்லுங்கள், வெற்று விளம்பரத்திற்காக பேச வேண்டாம் என தெரிவித்துள்ளார்.
மேலும், மாவட்டம் வாரியாக, மின்வாரிய உயர் அதிகாரிகள் இரவு நேரங்களிலும் சிறப்பு பணிகளில் ஈடுபட்டு சீரான மின் விநியோகம் வழங்குவதற்க்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்; அடுத்த 3 நாட்களுக்கு வரும் கன மழையை கையாள தயாராக உள்ளோம்.
இதுவரை 10,77,910 பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைக்காலத்தில் சீரான மின் விநியோகம் வழங்குவதற்க்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் நடைபெற்று வருகிறது என தெரிவித்துள்ளார்.