12-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்களுக்கு வீடியோ வடிவில் பாடங்கள்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் கடந்த சில மாதங்களாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிவு செய்துள்ள நிலையில், அரசுப் பள்ளிகள் தொலைக்காட்சி வாயிலாக பாடங்களை நடத்த முடிவு செய்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் 2-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாகவும், மேலும் 14 தனியார் தொலைக்காட்சி வாயிலாகவும் பாடங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் வீடியோ வடிவில் வழங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை கோட்டூர்புரத்திலுள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஸ்டியோ தயார் செய்யப்பட்டு பாடங்கள் வீடியோ வடிவில் தயார் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இந்த வீடியோக்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று முதல், 12-ம் வகுப்பு மாணவர்களை பள்ளிக்கு வரச் சொல்லி வீடியோவை பதிவிறக்கம் செய்து அளிக்க உள்ளனர்.
சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நாகைக்கு தென் கிழக்கே 810 கிமீ தொலைவில்…
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு…
சென்னை : கனமழை எதிரொலியாக தஞ்சை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், காரைக்கால்…
சென்னை : டெல்டா மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள ரெட் அலர்ட் காரணமாக இன்று ஒரு சில மாவட்ட பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலம் நேற்று மற்றும் இன்று என இரண்டு நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. அதில்,…
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…