எதிர்பார்த்த அளவை விட குறைவான மழை.! அமைச்சர் K.K.S.S.R.ராமச்சந்திரன் பேட்டி.!

Minister KKSSR Ramachandran

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி கடந்த மாதத்தை விட இந்த மாத தொடக்கத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் மிதமானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது.இதனால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்குவதும், அதனை சரி செய்யும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.

Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழை!

அவர் கூறுகையில், கடந்த 21.10.2023 முதல் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. இதனை எதிர்கொள்ள தமிழக முதல்வரின் உத்தரவின்படி, கடந்த 19.09.2023ஆம் தேதி தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடத்தினோம். அதே போல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் தலைமையில் அரசு அதிகாரிகளும் ஆலோசனை மேற்கொண்டனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு வேண்டிய பணிகளை தயார் செய்து வருகிறோம். கடந்த மாதத்தை பொறுத்தவரையில் 43 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது. நாளை உள் மாவட்டங்களிலும், இன்று கடற்கரை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

பேரிடர் பணிக்காக 400 பேர் தயார் நிலையில் இருக்கிறார்கள். எங்கே தேவை இருக்கிறதோ அங்கே உடனடியாக வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவர். இந்த மழையை எதிர்பார்த்து அரசு தயார் நிலையில் இருக்கிறது. மழைநீர் தேங்குவதை தடுக்க இரவு பகல் பாராமல் மாநகராட்சி ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள்.

உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களும் மழைநீர் வடிகால் பணிகளை கண்காணித்து வருகிறார்கள். எதிர்பார்த்த அளவை விட மழையின் அளவு குறைவாக பெய்து வருகிறது.

சென்னையில் மட்டும் 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 22 சுரங்க பாதையை கண்காணித்து வருகிறோம் . 169 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளது. 260 ராட்சச பம்புகள் தயார் நிலையில் உள்ளது. கடலோரே மாவட்டங்களில் மீனவர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி தகவல் கூறியுள்ளோம் என பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்