திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து மயக்கமடைய அரை மணி நேரம் வரை ஆகும் அல்லது மருத்தின் வீரியத்தை பொறுத்து கூடுதல் நேரம் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பூரில் 7 பேரை தாக்கி மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை. திருப்பூர் அம்மாபாளையம் அருகே குடோனில் பதுங்கியிருந்து பொதுமக்களை தாக்கி வந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது மயக்கமடைந்த சிறுத்தை வனத்துறையினரிடம் சிக்கியது. மயக்க ஊசி செலுத்தியதால் புதருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் வனத்துறையினர் பிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறுத்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்த பின் வனப்பகுதியில் விடுவிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் பாலியல் தொடர்பான குற்றங்கள் அதிகரித்து வருவதாக சமீபகாலமாக தொடர்ச்சியாக வெளியாகும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக…
டெல்லி : புதிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்த ராஜுவ்குமார் நேற்றுடன்…
சென்னை : தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இன்று ஒரே சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது, இதனால்ஆபரணத் தங்கத்தின் விலை…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட தயாராகி வருகிறது. இந்த தொடரில் இந்திய…
திருப்பூர் : ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது பெண் ஒருவருக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : தமிழ்நாட்டு மக்களிடம் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…