திருப்பூரை திணறடித்த சிறுத்தையை பிடித்த வனத்துறை!
திருப்பூர் அம்மாபாளையத்தில் ஊருக்குள் புகுந்து மக்களை அச்சறுத்திய சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
திருப்பூரில் 7 பேரை தாக்கி கடந்த கடந்த 4 நாட்களாக திணறடித்து வந்த சிறுத்தையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இன்று திருப்பூர் நகரப்பகுதியில் புகுந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. முட்புதரில் பதுங்கியிருந்த சிறுத்தைக்கு முதல் மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். மயக்க ஊசி செலுத்தியத்திலிருந்து மயக்கமடைய அரை மணி நேரம் வரை ஆகும் அல்லது மருத்தின் வீரியத்தை பொறுத்து கூடுதல் நேரம் எடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், திருப்பூரில் 7 பேரை தாக்கி மக்கள் மத்தியில் அச்சுறுத்தலை ஏற்படுத்திய சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தது வனத்துறை. திருப்பூர் அம்மாபாளையம் அருகே குடோனில் பதுங்கியிருந்து பொதுமக்களை தாக்கி வந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது மயக்கமடைந்த சிறுத்தை வனத்துறையினரிடம் சிக்கியது. மயக்க ஊசி செலுத்தியதால் புதருக்குள் மயக்க நிலையில் இருந்த சிறுத்தையை வலை மூலம் வனத்துறையினர் பிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து சிறுத்தைக்கு டி.என்.ஏ பரிசோதனை செய்த பின் வனப்பகுதியில் விடுவிப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர் குமார் நீரஜ் தகவல் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.