LeoFilm: லியோ திரைப்பட சிறப்பு காட்சி: இன்று மாலை முக்கிய ஆலோசனை!
லியோ சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி, இன்று மாலை 4 மணிக்கு தமிழக அரசு அதிகாரிகளுடன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்த உள்ளது.
லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், காலை 4 மற்றும் 7 மணி காட்சிகளுக்கு அனுமதி கோரிய வழக்கில், இதனை தமிழக அரசே முடிவு செய்யும் என்று உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. அதன்படி, 9 மணி காட்சிக்கு பதிலாக, 7 மணிக்கு தொடங்க தமிழக அரசிடம் மனு அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், லியோ படத்திற்கு காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி அனுமதி தொடர்பாக தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் இன்று மாலை 4 மணிக்கு பட படக்குழுவினர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இன்று மாலை அல்லது நாளை மதியத்திற்குள் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாக நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. இதற்கிடையில், 20ம் தேதி முதல் 24 தேதி வரை திரையிடப்படும் நாட்களின் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டது. ஆனால், முதல் நாளுக்கான டிக்கெட் இன்னும் ஓபன் ஆக வில்லை, காரணம் (19ம் தேதி) முதல் நாள் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி படக்குழு தரப்பில் வழக்கு தொடரந்தது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், லியோ திரைப்படத்தின் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என்றும், காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் மனு அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
LeoFDFS: லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அதன்படி, அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவை நாளை மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
LeoFDFS: நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ 4 மணி காட்சி அனுமதிக்கப்படும் – அமைச்சர் ரகுபதி அறிவிப்பு.!
இதற்கிடையில், சினிமா விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டதில்லை என அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், லியோ திரைப்படத்திற்கு 5 சிறப்பு காட்சிகள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திரை உலகம் எங்களுடை நட்பு உலகம், திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை, அவர்களை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துகிறோம். லியோ திரைப்பட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்கு கட்டுப்படுவோம் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.