சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கான இருக்கைகளில் மாற்றமில்லை.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்னும் சற்று நேர்தத்தில் தொடங்க உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் சபாநாயகர் அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தனர்.
அதில், ஓபிஎஸ் தரப்பில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்பதால் சட்டப்பேரவை நிகழ்வுகளில் கட்சி சார்ந்த எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன்னிடம் கலந்து ஆலோசிக்கவேண்டும் என்றும், ஈபிஎஸ் தரப்பில் அதிமுகவின் எதிர்க்கட்சி துணைத்தலைவர் என்ற அடிப்படையில் அலுவல் ஆய்வுக்குழுவில் ஆர்.பி.உதயகுமாரை அனுமதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், சட்டப்பேரவையில் அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கான இருக்கைகளில் மாற்றமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எடப்பாடி பழனிசாமிக்கு அருகே ஓ.பன்னீர்செல்வத்துக்கு இருக்கை நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம், ஐயப்பன் ஆகியோருக்கான இருக்கைகளிலும் மாற்றமில்லை; சட்டமன்ற பேரவை விதி 6-ன் படி சபாநாயகருக்கு உள்ள உரிமையின் அடிப்படையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…