சட்டப்பேரவை கூட்டத்தொடர் – காவல்துறை மானிய கோரிக்கை மீது விவாதம்!

Default Image

சட்டப்பேரவையில் நடைபெறும் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று காவல்துறை, சட்ட ஒழுங்கு, தீயணைப்பு & மீட்பு பணிகள் மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது. மானிய கோரிக்கை விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாதவரம் சுதர்சனம் விவாதங்களை முன்னெடுக்கின்றனர்.

சட்டப்பேரவையில் நடைபெறும் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச உள்ளார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட காவல்துறை நியமனங்கள் குறித்து எதிர்க்கட்சிகள் பேசியிருப்பதாக தகவல் கூறப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் திருத்த சட்ட முன்வடிவை அமைச்சர் கே.என்.நேரு அறிமுகம் செய்கிறார். 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் திருத்த சட்ட முன் வடிவை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிமுகம் செய்கிறார்.

கேள்வி நேரத்துடன் தொடங்கும் சட்டமன்ற கூட்டத்தில் பண்ருட்டி தொகுதியில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்பு குறித்து வேல்முருகன் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருகிறார்.

ஆதிதிராவிடர், பழங்குடினர் நல ஆணையம் அமைப்பதற்கான சட்ட மசோதாவை அமைச்சர் கயல்விழி தாக்கல் செய்கிறார். இதனிடையே நேற்று நடைபெற்ற சட்டப்பேரவையில், மாநில அளவில் ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல ஆணையம்” தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும் என்றும் இதற்கான சட்ட திருத்தும் கொண்டு வரப்படும் எனவும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்