சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்.. மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்!
மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைப்பு.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில், மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படுகிறது. திரைப்பட வசன கர்த்தா ஆரூர்தாஸ், தமிழறிஞர் அவ்வை நடராசன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. முன்னாள் எம்எல்ஏக்கள் அ.சின்னசாமி, தில்லை காந்தி, துரை கோவிந்தராசன் மற்றும் நா.சோமசுந்திரம் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழறிஞர் க.நெடுஞ்செழியன், பிரபல ஓவியர், எழுத்தாளர் மனோகர் தேவதாஸ் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சிறுபான்மையினர் ஆணைய துணை தலைவர் மஸ்தான், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
மேலும், கால்பந்து ஜாம்பவான் பீலே மறைவுக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இரங்கல் தீர்மானத்தை தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு நாள் முழுவதும் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்டுகிறது.