தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரை கலைவாணர் அரங்கில் நடத்துவது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் தமிழகத்தில் சட்டமன்ற தொடரை சமூக இடைவெளியுடன் தலைமைச் செயலகத்தில் நடத்த போதுமான இடம் மற்றும் வசதிகள் இல்லாத காரணத்தினால், இந்தக்கூட்ட தொடரை வாலஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடத்த திட்டமிட்டதாக தகவல் வெளியானது.
அந்தவகையில், நேற்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால், சட்டப்பேரவைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலைவாணர் அரங்கத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் தனபால், கலைவாணர் அரங்கில் கூட்டத் தொடரை நடத்த ஆலோசனைகள் நடைபெற்று வருகிறதாகவும், இது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…