மக்களின் இயல்பு வாழ்க்கை விரைந்து திரும்பிட இணைந்து நிற்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எம்எல்ஏகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று நடைபெற்ற தமிழக சட்டப்பேரவையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் பதவியேற்றனர். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகராக திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் கு.பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அப்போது, முதலமைச்சர் முக ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி எம்எல்ஏக்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில், இயல்பு வாழ்கை திரும்பிட இணைந்து நிற்போம் என்று பொறுப்பேற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பதினாறாவது சடடமன்ற பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக்கொண்ட மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறியுள்ளார்.
கொரோனா பேரிடரிலிருந்து மக்களை பாதுகாப்பதே அரசின் முதன்மையான பணி. நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கு அரசு முழுமையான அர்ப்பணிப்புடன், போர்க்கால அடிப்படையில் செயலாற்றி வருகிறது. அரசு அதிகாரிகள், முன்கள பணியாளர்கள், காவல்துறையினர் என பல தரப்பினரும் தன்னலம் கருதாமல் செயலாற்றி வருகிறார்கள்.
மேலும், சமூக நல ஆர்வலர்களும், தொழில் நிறுவனத்தாரும் அரசு மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு உதவிக்கரம் அளித்து வருகின்றனர். அதுபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் அவரவர் தொகுதிகளில் உதவிகளை மேற்கொண்டு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு உடனடி நடவடிக்கையினை – உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் என்ற உத்தரவாதத்தை அளிக்கிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தை மீட்பதற்கு ஆளும் கட்சி, எதிர் கட்சி, தோழமை கட்சி என்பதை கடந்து மக்களின் பிரதிநிதிகளாக செயலாற்றுவோம் என்றும் மக்களின் இயல்பு வாழ்கை திரும்பிட அனைவரும் இணைந்து நிற்போம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…
சென்னை : பொதுவாகவே எந்த மொழிகளில் ஒரு நல்ல திரைப்படங்கள் வெளியானாலும் அதனை எல்லா மொழி ரசிகர்கள் பார்க்க ஆர்வம்…
சென்னை : நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று…
கடலூர் : வங்கக்கடலில் இன்று மாலையில் உருவாகவிருக்கும் புயல் அடுத்த இரு நாட்களுக்குள் காரைக்காலுக்கும், மாமல்லபுரத்திற்கும் இடையே கரையைக் கடக்கும்…
டெல்லி : டெல்லி பிரசாந்த் விஹார் பகுதியில் உள்ள PVR திரையரங்கம் அருகே பெரும் சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததால்…
இஸ்லாமாபாத் : அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மினி உலகக்கோப்பை என அழைக்கப்படும் 'சாம்பியன்ஸ் டிராபி' தொடர் நடைபெறவுள்ளது. கடந்த…