தமிழக சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 13-ஆம் தேதி சென்னை வாலாஜா சளியில் உள்ள கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அப்போது தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து, மறுநாள் 14ம் தேதி முதன் முறையாக வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் பட்ஜெட்டை, வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
இதனைத்தொடர்ந்து, நேற்று தொடங்கிய தமிழக சட்டப்பேரவையில், துறை சார்ந்த மானியக் கோரிக்கைகள் மீதான விவாதமும், மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் மதுசூதனன், திண்டிவனம் ராமமூர்த்தி ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து மாநில பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் காரசாரமாக நடைபெற்றது.
இந்த நிலையில், இன்று கூடி இருக்கும் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான இரண்டாம் நாள் விவாதம் நடைபெற்று வருகிறது. அமைச்சர்கள் பழனிவேல் தியாகராஜன், எம்ஆர்கே பன்னீர்செல்வம் பட்ஜெட் விவாதத்தில் பங்கேற்று பதில் அளிக்கின்றனர். அதிமுக சார்பில் எஸ்பி வேலுமணி, சம்பத்குமார் ஆகியோர் பட்ஜெட் விவாதத்தில் பேசவுள்ளனர்.
முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்பி வேலுமணி விவாதத்தில் பேசவுள்ளதால், டெண்டர் முறைகேடு புகார் குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. நேற்றைய சட்டப்பேரவையில் கரும்புக்கான ஆதார விலை, தேர்தல் வாக்குறுதிகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பட்ஜெட் உரை மீதான விவாதம் 4 நாட்களுக்கு நடைபெற உள்ளது. சட்டப்பேரவையில் செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…