முதல்வருக்கு நன்றி தெரிவித்து வேளாண் பொருட்களை வழங்கிய சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா..!
சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள் முதல்வருக்கு மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் வழங்கினார்.
நேற்று 2023-24-ஆம் நிதியாண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் அவர்கள், தமிழக வேளாண் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தோளில் பச்சை துண்டு அணிந்து வந்து வேளாண் பட்ஜெட்டை வாசித்தார்.
இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் மற்றும் விவசாயம் குறித்து பல அறிவிப்புகள் வெளியானது. இந்த நிலையில் சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி.ராஜா அவர்கள், 2023-2024ஆம் ஆண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத் துறையின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதையொட்டி, உழவர் நலனுக்கு அதிக முக்கியத்துவம் தந்து, பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவித்து, பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்ததுடன், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் வழங்கினார்.
அதிக முக்கியத்துவம் தந்து, பாரம்பரிய விவசாயத்தை ஊக்குவித்து, பல்வேறு திட்டங்களை அறிவித்தமைக்காக நன்றி தெரிவித்ததுடன், மதிப்புக் கூட்டப்பட்ட வேளாண் பொருட்களையும் வழங்கினார்.
2/2#CMMKSTALIN #TNDIPR #TNBudget2023 #TNAgriBudget2023@CMOTamilnadu@MRKPanneer @mp_saminathan— TN DIPR (@TNDIPRNEWS) March 21, 2023