சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடங்கியது! முதல் முறையாக அமைச்சர் உதயநிதி பதில்!
திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்விக்கு முதல் முறையாக அமைச்சர் உதயநிதி பதில்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. இன்று சட்டப்பேரவையில் கேள்வி நேரம் நடைபெற்று வருகிறது. உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருப்பூரில் நவீன வசதியுடன் விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என அறிவித்தார்.
உலக கோப்பை கபடி போட்டி தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டமன்றத்தில் திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்விக்கு அமைச்சர் உதயநிதி பதிலளித்தார். அமைச்சரான பின்னர் முதல் முறையாக சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.