ஜூன் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்…!

Default Image

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஜூன் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான புதிய அரசு, பொறுப்பேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து, 16-ஆவது புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியுள்ளது. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையாற்றியுள்ளார்.

சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில், ஜூன் 24-ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம் நடைபெறும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை மற்றும் நாள் மறுநாள் ஆளுநர் உரை மீதான உறுப்பினர்களின் விவாதம் நடைபெற உள்ளது. மேலும், ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது ஜூன்-24ம் தேதி  முதலமைச்சர் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Gnanasekaran Anna University
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)