தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
தமிழகத்தில் இன்னும் ஒருசில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், அனல்பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர், கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது.
நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரைமுடிந்த பின் சட்டப்பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்வதை சுட்டிக்காட்டி, திமுக உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பியிருந்தனர். இதையடுத்து, பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…
சூரசம்ஹாரம் தோன்றிய வரலாறு மற்றும் திருசெந்தூரில் சூரசம்ஹாரம் நடைபெறும் நேரம் என்ன என்பதை பற்றி இந்த செய்தி குறிப்பில் காணலாம்…
வாஷிங்டன் : நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில்…
ஃப்ளோரிடா : அமெரிக்காவில் நடைபெற்று வந்த அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக…
அமெரிக்கா : அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதாக அமெரிக்காவின் பிரபல செய்தி தொலைக்காட்சியான ஃபாக்ஸ்…
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…