தமிழில் கையெழுத்திட தடை விதிக்கும் பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்…!அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
சிலைகள் எந்த காலகட்டத்தில் கடத்தப்பட்டிருந்தாலும் அரசு அதை மீட்கும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறுகையில்,தமிழில் கையெழுத்திட தடை விதிக்கும் பள்ளிகள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆங்கிலத்தில் உள்ள ஊர்கள் மற்றும் தெருக்களின் பெயர்களை தமிழில் மாற்றுவதற்கான வேலைகள் 2 வாரத்தில் தொடங்கும்.இந்து சமய அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது. சிலைகள் எந்த காலகட்டத்தில் கடத்தப்பட்டிருந்தாலும் அரசு அதை மீட்கும்