இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓபிஎஸ்

தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டதற்கு ஓபிஎஸ் கண்டனம்.
தஞ்சை வடக்கு வீதியில் அமைந்துள்ள அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எம்.ஜி.ஆர் அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்வத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அவர்கள் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘ அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரும், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான பாரத ரத்னா மாண்புமிகு டாக்டர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை நேற்று இரவு சில மர்ம நபர்களால் முற்றிலுமாகத் தகர்த்தப்பட்டுள்ளதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுபோன்ற விஷமச் செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கண்டறிந்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
நாட்டிற்கு உழைத்த தலைவர்களை அவமதிக்கும் வகையில் இதுபோன்ற இழி செயல்களில் ஈடுபட்டு, பொது அமைதிக்கு குந்தகம் செய்வோர் மீது சட்டப்படி தக்க நடவடிக்கை எடுத்திடுக! pic.twitter.com/SNxgMUSNi3
— O Panneerselvam (@OfficeOfOPS) January 25, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
இந்தியா vs பாகிஸ்தான் : நதிநீர் நிறுத்தம், மருத்துவ சேவை நிறுத்தம்., பாக். வான்வழி தடை!
April 24, 2025
பஹல்காம் தாக்குதல் : “முஸ்லீம்கள் – இந்துக்களை தனித்தனியாக பிரிக்க சொன்னார்கள்?” தந்தையை இழந்த சிறுவன் பகீர் தகவல்!
April 24, 2025