சென்னையில் உள்ள லீலா பேலஸில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஜினிகாந்த், 3 திட்டங்களை முன்வைத்தார். கட்சிக்கு ஒரு தலைமை, ஆட்சிக்கு ஒரு தலைமை, 60 வயத்துக்கு கீழ் இருப்போருக்கு வாய்ப்பு மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு வாய்ப்பு என கூறினார். இதையடுத்து மக்களிடம் ஆட்சி மாற்றத்திற்கான எழுச்சி தெரிந்தால் தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பேன் என்று தெரிவித்தார். மேலும் ஆட்சி மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று ரஜினிகாந்த் குறிப்பிட்டார். ரஜினியின் பேச்சிக்கு பலரும் பாராட்டும் விமர்சனமும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சென்னை யானைகவுனியில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த தயாநிதி மாறன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரலை என்று சொன்னவரை விட்டு விடுங்கள் என்றும், திரும்ப திரும்ப தொந்தரவு படுத்த வேண்டாம் என்றும் கூறியதோடு, ரஜினி எங்கே இருந்தாலும் அவருக்கு வாழ்த்துக்கள் என்றும் கூறினார். மேலும் நடிகர் ரஜினிகாந்த் அவரது பலம் எது, பலவீனம் எது என்று ஆராய்ந்து பேசியிருப்பதாக திமுக எம்பி தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…