கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து வெளியேறினேன்-துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு உருக்கம்

Default Image

துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு 2 ஆண்டுகளில் செய்த  ஆவணப்படுத்தும் வகையில்   “கவனித்தல், கற்றல் மற்றும் தலைமையேற்றல்” என்ற  புத்தக வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா,பிரகாஷ் ஜவடேகர்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்,தமிழக முதலமைச்சர் பழனிசாமி,துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ,நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதில்  துணை குடியரசு தலைவராக வெங்கையா நாயுடு பேசுகையில்,அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அரசியலில் இருந்து ஓய்வுபெற்றாலும்,பொதுவாழ்வில் இருந்து ஓய்வு பெறவில்லை.

பொதுவாழ்வில் இருப்பவர்கள் தொடர்ந்து கற்றுகொண்டே இருக்கவேண்டும். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்திப்பதிலேயே மகிழ்ச்சி.

ஆந்திராவில் வாஜ்பாயின் வருகையை சுவரில் எழுதியவன்.மத்திய அமைச்சர் பதவியை இழந்ததால் நான் கண்ணீர் விடவில்லை. துணை குடியரசு தலைவராக என்னை தேர்ந்தெடுத்தபோது நான் கண்ணீர் விட்டேன் . துணை குடியரசு தலைவர் பதவியில் அமர்ந்ததும் கனத்த இதயத்தோடு கட்சியில் இருந்து வெளியேறினேன்.துணை குடியரசு தலைவராக  வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. அனைத்து துறைகளிலும் தமிழகம் சிறந்து விளங்குகிறது.

சட்டப்பிரிவு 370-ஐ  நீக்கிய பிறகு  உலக நாடுகள் இந்தியாவிற்கு முழு ஆதரவுகள் அளித்து வருகின்றது.இயற்கையை நாம் பாதுகாத்தல் ,இயற்கை நம்மை  பாதுகாக்கும் என்பதை உணர வேண்டும்.

நாடாளுமன்றம் சிறப்பாக செயல்பட  கட்சி வேறுபாடின்றி எம்.பி.களை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சட்டம் இயற்றுவது மட்டுமே அரசின் கடமை அல்ல சட்டங்கள் சரியாக அமல்படுத்துவதும் அரசின் கடமை.

வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.அதனை அரசு உறுதிப்படுத்த வேண்டும்.  மக்கள் எந்த சேவைக்காகவும் வரிசையில்  நிற்க கூடாது .லைனில் நிற்பதை தவிர்த்து ஆன்லைன் ஆக வேண்டும்.

நாடு சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளாகியும் 20 % மக்கள் படிப்பறிவு இல்லாமல் இருப்பது வேதனை அளிக்கிறது. தேர்தல் தொடர்பான வழக்குகளில் அடுத்த தேர்தலே  வந்து விடும் அளவு தீர்ப்பு வெளியாவதில்லை என்று துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்